புதன்

இன்றைய சந்தை 08/10/2008

இன்றைய நிலையில் நமது சந்தைகள் உலக சந்தையின் போக்கில் சென்று கொண்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும். நமது நிதியமைச்சர் மற்றும் வர்த்தக அமைச்சரின் கருத்துக்களை கேட்கும் பொழுது இங்கும் அமெரிக்க வங்கிகளை போல் நமது தனியார் வங்கிகள் கவலைகிடமாக இருப்பதாக தோன்றுகிறது. வங்கி பங்குகளில் தனியார் வங்கிப் பங்குகள் மிக பெரிய சரிவை சந்தித்துள்ளது, குறிப்பாக ஐசிஐசிஐ வங்கி பங்கு கடந்த 8/09 /2008 அன்று 732 என்ற அளவில் வணிகம் நடைபெற்று இன்று 08/10/2008 , 440 என்ற அளவில் வணிகம் சுமார் 45% குறைந்து வணிகம் நடைபெறுகின்றது.

திங்கள்

இன்று 06/10/2008

இன்று நமது சாந்த சுமார் 40 முதல் 80 புள்ளிகள் உயர்ந்து காணப்படும் என்றே எண்ணுகிறேன். கடந்த சில நாட்களாக கீழே சென்று கொண்டிருந்த நமது சந்தைகள் இன்று மேலே செல்ல Bounce Back ஆக அதிக வாய்புள்ளதாக தெரிகிறது. பணவீக்கம், கச்சா எண்ணெய், மற்றும் ரூபாயின் மதிப்பு ஆகியன கடந்த வாரங்களில் இருந்து வீழ்ச்சி அடைந்திருப்பதால் சற்று ஆறுதலை கொடுக்கிறது.
டாடாவின் நானோ கார் தொழிற்சாலை இன்னும் முழுமையாக எங்கு அமைய போகிறது என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், அதன் பங்குகளில் விலையில் சில மாற்றங்களை இந்த வாரம் எதிர்பார்க்கலாம். முன்பு சொன்னதை போல் சந்தைகள் எந்த திசையில் பயணிக்கிறது என்பது இன்னும் தெளிவாக புலப்படவில்லை, எனவே நீண்ட கால முதலீட்டாளர்கள் இன்னும் சற்று காலம் காத்திருக்க வேண்டி இருக்கும் .

Nifty Futures இன்று 3900 என்ற நிலைகளை தக்க வைக்கும் எனலாம்.

வெள்ளி

இன்றைய சந்தை 02/10/2008

இன்றைய சந்தை சுமார் 132. புள்ளிகள் குறைந்து 3818.30 என்ற நிலைகளில் முடிவடைந்துள்ளது. நேற்றே 4000 என்ற அளவில் புள்ளிகளில் தக்க வைத்து கொள்ளாத நிலையில் இன்று மீண்டும் கீழே சென்றுள்ளது. நீண்ட கால முதலீட்டாளர்கள் இன்னும் சற்று காலம் காத்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.இனி வரும் நாட்களில் காலாண்டு நிதி அறிக்கைகள் கிடைக்க இருப்பதால் எந்தெந்த பங்குகள் தன் நிலையை தக்க வைக்கும் என்பதை பார்க்கலாம்.
இரும்பு சம்பந்தப்பட்ட பங்குகள் மீண்டும் இன்று கீழே இறங்கி உள்ளது, அதிலும் Tata Steel 400 என்ற நிலையை உடைத்திருப்பது சற்றே அப்பங்கின் தொய்வை காணலாம்.இன்றைய சந்தை உலக அளவில் முதலீட்டலர்களிடம் சற்று குழப்பத்தை உண்டு பண்ணி உள்ளது எனலாம்.
ஆசியா மற்றும் அமெரிக்கா சந்தைகள் பொருளாதார சிக்கல்களில் இருந்து எப்பொழுது விடுபடும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் பயத்தை உண்டு பண்ணி உள்ளது. எந்த நிலையில் வணிகம் செய்யலாம் என்ற குழப்ப நிலையை கடந்த சில நாட்களாக கண்டோம். இது வரும் நாட்களிலும் தொடரும் என்றே எண்ணுகிறேன்.