வெள்ளி

தங்க விதிகள்

" NEVER TRY TO CATCH A FALLING KNIFE " என்ற மேற்கோள் எதற்கு பொருந்தும் என்பதற்கு கடந்த வாரத்தில் SATYAM COMPUTER பங்கினை 60 ரூபாய்க்கு மேல் வாங்கியவர்களிடம் கேட்க வேண்டும். வாங்கியவர்களின் கதி என்ன என்பதை கண்கூட பார்க்கிறோம்.ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் தான் பல்வேறு தில்லு முல்லுகளை கணக்கு வழக்குகளில் செய்துள்ளதை ஒப்புக் கொண்ட பிறகும் அப்பங்கினை வாங்குகிறார்கள் என்றால் என்ன சொல்வது?
எப்பொழுதும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது எப்பங்கு ஒரு விலையில் இருந்து 25 சதவீதத்திற்கு மேல் ஒரே நாளில் இறங்குகிறதோ அப்பங்கை முன்தினம் முடிவடைந்த விலையை எப்பொழுது வாரக்கடைசியில் தக்க வைத்து கொள்கிறதோ அப்பொழுது நீங்கள் வாங்கலாம் இல்லைஎன்றால்
கத்தி நம்மை பதம் பார்த்துவிடும் என்பதை நினைவில் கொள்ளவும்.

மென்பொருள்

NIFTY FUTURES இல் வணிகம் செய்வது மட்டுமே இன்றைய நிலையில் நமது முதலீட்டிற்கு உண்டான வருமானத்தை அடைய முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்பதை கடந்த மூன்று மாதங்களாக என்னால் உணர முடிந்தது. இதில் வணிகம் செய்ய பலரும் பல வழிகளை கையாண்டாலும் ஒவ்வொருவரும் அதை முழுமையாக கடைபிடிப்பவர்கள் தங்களால் வணிகத்தில் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை உணர்ந்திருப்பார்கள்.
வணிகம் செய்யும் பொழுது நாம் கடை பிடிக்க வேண்டிய முக்கிய பண்புகளில் தேவை பொறுமை மட்டுமே. NIFTY FUTURES வணிகம் செய்யும் பொழுது நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.அது சந்தை எந்த திசையில் பயணிக்கிறதோ அந்த திசையில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு வெற்றி தான்,சரி சந்தை எந்த திசையில் பயணிக்கிறது என்பதை எவ்வாறு கணிப்பது என்பது முதல் கேள்வியாக எழும். இதற்கு உங்களுக்கு தேவை சந்தைக்கு தேவையான மென்பொருள் மட்டுமேயாகும். அதில் உங்களுக்கு தேவையான DATA களை முதலில் பெற வேண்டும்.அதற்கு பலர் இன்று இருக்கிறார்கள் , அவர்களிடம் முறையாக நாம் பதிவு செய்தால் நமக்கு சந்தையில் நடக்கும் வணிக குறிப்புகளை நமது மென்பொருளுக்குள் பதிவிறக்கம் செய்துவிட்டால் நேரடியாக சந்தையை கவனிக்க தொடங்கலாம். அடுத்து நாம் செய்ய வேண்டியது மிக முக்கியமான ஒன்று மென்பொருளை எப்படி கையாள்வது என்பதை விட அதிலிருந்து நமக்கு தேவையான குறிப்புகளை பெறுவது மட்டுமே ஆகும். அதற்கு எந்த மென்பொருளுக்கு எங்கு DATA பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிய உங்களுக்கு என்ன உதவிகள் தேவை என்றால் எனக்கு இ-மெயில் செய்யவும் அல்லது பின்னுட்டத்தில் எழுதவும்.

SOFTWARES

பங்கு சந்தைக்கு என்று இருக்கும் சில மென்பொருட்கள் (SOFTWARES)

1.Amibroker (.Amibroker.com)

2.Metastock (http://www.equis.com/)

3.Advancedget (http://www.esignal.com/advancedget/default.aspx)



இவைகள் வெறும் மென் பொருட்கள் மட்டுமே, இவற்றிற்குi இவை குறிப்புகள் (Data's) பலர் கொடுக்கின்றனர், இவைகளை பற்றி அறிந்து கொள்ள எனக்கு இ-மெயில் அனுப்பவும்.

02/01/2009

இந்த வாரம் nifty future 3055 என்ற அளவில் முடிவடைந்துள்ளது நம்பிக்கை அளித்துள்ளது, மேலும் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பை அறிவித்துள்ளது மேலும் வரும் வாரங்களில் புது தெம்பினை ஊட்டும் என்பதை மறுப்பதற்கில்லை. வரும் நாட்களில் ரியல் எஸ்டேட் பங்குகள் சற்றே மேலே செல்ல வாய்ப்புகள் உள்ளது. எனவே 3250 என்ற நிலையை அடையும் என்று எதிர்பார்க்கலாம். என் வேலைபலுவின் காரணமாகவும் மேலும் இன்டர்நெட் குளறுபடிகளால் கடந்த சில நாட்களாக எழுத முடியாமல் தவித்தேன். இனி வரும் பதிவுகளில் nifty future இல் வணிகம் செய்யும் உக்தியை பற்றி விரிவாக அலசுவோம்.

நமக்கு தெரிந்த அல்லது தெரியாத ,பரிச்சயமான சில சந்தைக்கு தேவையான மென்பொருட்கள் (SOFTWARES) பற்றியும் பார்ப்போம் .