ஞாயிறு

இன்று எப்படி இருக்கும்

கடந்த சில நாட்களாக போர் வரும் என்ற அரசியல் குழப்பங்கள் நிலவி வரும் சூழ்நிலையில் மீண்டும் NIFTY கீழே செல்லும் என்ற வதந்தி பரவி வருகிறது. மேலோட்டமாக பார்க்கும் பொழுது, 3000 என்ற நிலையை உடைத்து வாரக்கடைசியில் முடிவடைந்திருப்பது சற்று குழப்பம் தான். NIFTY short இல் இருப்பவர்கள் 2930 என்ற நிலையில் கவனமாக இருக்கவும்.

வியாழன்

கடந்த மாதம் முழுவதும் என் எண்ணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை .இனி வரும் நாட்களில் இருந்து இவ்வலைத்தளத்தில் NIFTY பற்றிய நகர்வுகளை பற்றி விரிவாக உரையாடலாம்.

புதன்

இன்றைய சந்தை 08/10/2008

இன்றைய நிலையில் நமது சந்தைகள் உலக சந்தையின் போக்கில் சென்று கொண்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும். நமது நிதியமைச்சர் மற்றும் வர்த்தக அமைச்சரின் கருத்துக்களை கேட்கும் பொழுது இங்கும் அமெரிக்க வங்கிகளை போல் நமது தனியார் வங்கிகள் கவலைகிடமாக இருப்பதாக தோன்றுகிறது. வங்கி பங்குகளில் தனியார் வங்கிப் பங்குகள் மிக பெரிய சரிவை சந்தித்துள்ளது, குறிப்பாக ஐசிஐசிஐ வங்கி பங்கு கடந்த 8/09 /2008 அன்று 732 என்ற அளவில் வணிகம் நடைபெற்று இன்று 08/10/2008 , 440 என்ற அளவில் வணிகம் சுமார் 45% குறைந்து வணிகம் நடைபெறுகின்றது.

திங்கள்

இன்று 06/10/2008

இன்று நமது சாந்த சுமார் 40 முதல் 80 புள்ளிகள் உயர்ந்து காணப்படும் என்றே எண்ணுகிறேன். கடந்த சில நாட்களாக கீழே சென்று கொண்டிருந்த நமது சந்தைகள் இன்று மேலே செல்ல Bounce Back ஆக அதிக வாய்புள்ளதாக தெரிகிறது. பணவீக்கம், கச்சா எண்ணெய், மற்றும் ரூபாயின் மதிப்பு ஆகியன கடந்த வாரங்களில் இருந்து வீழ்ச்சி அடைந்திருப்பதால் சற்று ஆறுதலை கொடுக்கிறது.
டாடாவின் நானோ கார் தொழிற்சாலை இன்னும் முழுமையாக எங்கு அமைய போகிறது என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், அதன் பங்குகளில் விலையில் சில மாற்றங்களை இந்த வாரம் எதிர்பார்க்கலாம். முன்பு சொன்னதை போல் சந்தைகள் எந்த திசையில் பயணிக்கிறது என்பது இன்னும் தெளிவாக புலப்படவில்லை, எனவே நீண்ட கால முதலீட்டாளர்கள் இன்னும் சற்று காலம் காத்திருக்க வேண்டி இருக்கும் .

Nifty Futures இன்று 3900 என்ற நிலைகளை தக்க வைக்கும் எனலாம்.

வெள்ளி

இன்றைய சந்தை 02/10/2008

இன்றைய சந்தை சுமார் 132. புள்ளிகள் குறைந்து 3818.30 என்ற நிலைகளில் முடிவடைந்துள்ளது. நேற்றே 4000 என்ற அளவில் புள்ளிகளில் தக்க வைத்து கொள்ளாத நிலையில் இன்று மீண்டும் கீழே சென்றுள்ளது. நீண்ட கால முதலீட்டாளர்கள் இன்னும் சற்று காலம் காத்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.இனி வரும் நாட்களில் காலாண்டு நிதி அறிக்கைகள் கிடைக்க இருப்பதால் எந்தெந்த பங்குகள் தன் நிலையை தக்க வைக்கும் என்பதை பார்க்கலாம்.
இரும்பு சம்பந்தப்பட்ட பங்குகள் மீண்டும் இன்று கீழே இறங்கி உள்ளது, அதிலும் Tata Steel 400 என்ற நிலையை உடைத்திருப்பது சற்றே அப்பங்கின் தொய்வை காணலாம்.இன்றைய சந்தை உலக அளவில் முதலீட்டலர்களிடம் சற்று குழப்பத்தை உண்டு பண்ணி உள்ளது எனலாம்.
ஆசியா மற்றும் அமெரிக்கா சந்தைகள் பொருளாதார சிக்கல்களில் இருந்து எப்பொழுது விடுபடும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் பயத்தை உண்டு பண்ணி உள்ளது. எந்த நிலையில் வணிகம் செய்யலாம் என்ற குழப்ப நிலையை கடந்த சில நாட்களாக கண்டோம். இது வரும் நாட்களிலும் தொடரும் என்றே எண்ணுகிறேன்.

திங்கள்

தங்க விதி 4

*'லாபத்தை வெளியே எடுங்கள் '*
* Withdraw a portion of your profits*
பங்கு வணிகத்தில் முக்கியமான விதியாக கருத்தில் கொள்ள வேண்டியது நீங்கள் ஈட்டும் லாபத்தை பகுதியாக வெளியே எடுத்துக்கொள்வது தான். குறிபிட்ட அளவு முதலீடு செய்து பங்கு வணிகம் செய்யும் பொழுது அதற்கேற்ற பலனை அனுபவிக்க நீங்கள் கண்டிப்பாக அதில் ஈட்டும் லாபத்தை சிறு சிறு அளவுகளாக நீங்கள் திரும்ப எடுப்பது தான். அவ்வாறு செய்யும் பொழுது சந்தையில் ஏற்படும் நிகழ்வுகளில் இருந்து பணத்தை இழந்தாலும்,நீங்கள் திரும்ப எடுத்த பணம் உங்கள் நஷ்டத்தை குறைக்க உதவும்.

இன்றைய வணிகம் 29-09-2008

எதிர் பார்த்ததை போலவே இன்று Nifty தன் கீழ் நிலையை அடைந்துள்ளது, சென்ற வாரங்களில் கூரியதை போல் எப்பொழுது 4000 என்ற நிலையை உடைத்து முடிவடைந்தாலும் கீழ் நிலைகளை கடக்கும் என்பதை இன்று பார்த்தோம். இது மேலும் கீழ்நிலைகளை எந்த அளவு சென்றடைந்து திரும்பும் என்ற கேள்விக்குறியை எழுப்பும், இவ்வாறு இருக்கையில் தின வணிகம் செய்வது சாலச் சிறந்தது. வரும் நாட்களில் சில நடவடிக்கைகள் நமக்கு உகந்ததாக பட்டாலும் அது எந்த அளவு நமது சந்தையை தக்க வைக்க உதவும் என்பது போக போக தான் தெரிய வரும்.
எது எப்படி இருந்தாலும் இப்பொழுது நிலவும் பிரச்சனைகள் விரைவில் தீர்க்க முடியாதது என்பது தெளிவான எண்ணமாகும்.பணவீக்கம் ,கச்சா எண்ணெய், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவது போன்றவை நமக்கு கவலையை தருகிறது.
இனி வரும் நாட்களில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் நமது Nuclear Deal ஒப்புதல் சில நாட்கள் நமது சந்தையை வழி நடத்தி செல்லும் எனலாம்.

வெள்ளி

இன்றைய சந்தை 26/09/2008

வேலைப் பளுவின் காரணமாக கடந்த சில நாட்களாக என் எண்ணத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
நேற்று அமெரிக்க சந்தை சற்று மேலே சென்றிருப்பதை பார்க்கையில் இன்று நமது சந்தை சற்று மேலே செல்ல வாய்ப்புகள் அதிகம் தென்படுகிறது. நேற்று Future expiry என்பதால் வணிகம் எவ்வாறு என்று கணிக்க முடியாத அளவு இருந்தது, புள்ளிகள் மேலே செல்வதும் கீழே வருவதுமாக இருந்தது. இனி இந்த காலாண்டிற்கான கணக்குகள் இந்த மாதம் வெளி வர இருப்பதால் சற்று கவனமாக செயல்படவேண்டும்.

இன்றைய வணிகம் சற்று குறைவாக நடைபெறும் என்றே எண்ணுகிறேன். Sun Outage காலம் இருப்பதால் தின வணிகம் செய்வதில் சற்று கவனம் தேவை. கண்டிப்பாக Stop loss உடன் வணிகம் செய்வது நல்ல பலனை தரும்.

இன்றைய Nifty + 50 முதல் +80 புள்ளிகளில் வணிகம் நடைபெறலாம்.

செவ்வாய்

இன்று எப்படி இருக்கும் 23/09/2008

இன்றைய சந்தை சற்று கீழிறங்கி ஆரம்பிக்கும் என்றே நினைக்கிறேன். அமெரிக்கா சந்தைகள் இன்றும் சற்று சரிவடைந்திருப்பது, அதன் கீழ் நிலைகளை அடைந்திருபதை உணர்த்துகிறது .

சனி

தங்க விதி 3

* சந்தை செல்லும் திசையில் வணிகம் செய்யவும் *
* TRADE WITH THE TREND *
பொதுவாக சற்று தின வணிகம் செய்ய பழகியதும் நாம் செய்யும் முக்கிய தவறு, முதல் நிலை பங்குகள் சற்று ஏற்றம் பெற்றவுடன் அவற்றை எதிர் திசையில் வணிகம் செய்வது தான். பொதுவாக NIFTY ல் இடம் பெற்றுள்ள முக்கிய பங்குகள் அவற்றின் நிலை எவ்வாறு பயணிக்கிறதோ அவ்வாறே அன்றைய தின வணிகம் இருக்கும், இதற்கு எதிராக நாம் செய்யும் வணிகம் நஷ்டத்தில் முடிவடையும் வாய்ப்புள்ளது எனலாம். அன்றைய நிலை ஏறுமுகமாக இருந்தால் வாங்கி விற்பனை செய்ய வேண்டும், இதற்கு எதிராக இவ்வளவு ஏறிவிட்டது இனி இறங்கும் என்று ஒவ்வொரு ஏற்றத்தில் விற்றுக் கொண்டிருந்தால் நமது முதலீட்டை இழக்க நேரிடும். எனவே சந்தையின் திசையில் வணிகம் செய்வது முக்கியமான ஒன்றாகும்.

வெள்ளி

இன்றைய சந்தை 19/09/2008

இன்றைய சந்தை காளையின் ஆதிக்கத்தில் இருந்ததை கண் கூட கண்டோம் , சுமார் 200 புள்ளிகளுக்கு மேல் வென்றிருக்கிறது.இன்றைய சந்தை நிலையான ஏற்றத்தை கண்டதில் லாபத்தை ஈட்டி இருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். கடந்த வாரங்களில் உலக சந்தையை ஒட்டியே சென்ற நமது சந்தை இன்றும் பயணித்தது. இன்றைய சந்தையில் நேற்றை போலவே மிக அதிக அளவில் வாணிபம் நடைபெற்றுள்ளது.
தங்கம் ஒரே நாளில் 100 டாலருக்கு மேல் உயர்ந்து இருப்பது இதுவே முதல் முறை.கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பில்லை என்றே மத்திய அமைச்சர் அறிவித்து இருப்பது கொஞ்சம் ஏமாற்றத்தை தருகிறது.
தின வணிகத்தில் Nifty Futures ல் வணிகம் செய்ய yahoo messenger ல் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.indyarocks.com என்ற வலைத்தளத்தில் உங்கள் Mobile Phone Number ஐ பதிவுசெய்து விட்டு என்னை அணுகலாம்.

இன்று எப்படி இருக்கும் 19/09/2008

உலக சந்தைகள் இன்று எழுச்சி பெற்றிருப்பதை பார்க்கையில் இன்று நமது சந்தை சுமார் 50-80 புள்ளிகள் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது. பணவீக்கம் சென்ற வாரத்தினை விட இன்று உயர்ந்திருப்பது கவலை அளித்தாலும் நமது சந்தையினை இன்று பாதிக்காது என்றே சொல்லலாம். எப்பொழுது நமது சந்தை 4000 என்ற நிலையில் இருந்து இறங்கி முடிவடைந்தாலும் கவனம் தேவை.

வியாழன்

இன்றைய வணிகம் 18-9-2008


எதிர்பார்த்ததை போலவே இன்றும் நமது சந்தை சுமார் 5 விழுக்காட்டை இழந்து , பின்னர் அனைத்து முன்னணி பங்குகளின் நிலையால் முன்னேறியது. நேற்றே சொன்னது போல் 4000 என்ற நிலைகளை கடந்து இரண்டாவது நாளாக நமது சந்தை நிறைவடைந்திருப்பது சற்று ஆறுதலை தருகிறது. அமெரிக்காவின் மத்திய வங்கிகள் அனைத்தும் ஒன்றினைந்து சுமார் 360 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி நெருக்கடியை சமாளிக்க கை கோர்த்துள்ளன. இவ்வறிப்பு அமெரிக்க சந்தையில் புதிய இரத்தத்தை பாய்ச்சும் என்றே கருதுகிறேன்.
கடந்த 52 வாரங்களில் இன்று Nifty Futures அதிக அளவில் இன்று வணிகம் நடந்துள்ளது. இது நமது சந்தையினை வலுவாக்குமா அல்லது வலுவிழக்க செய்யுமா என்று வரும் நாட்களில் தெரிய வரும். மேலும் இன்று இந்த வார பணவீக்க விகிதம் , சற்றே கீழே இறங்கினால் நமது சந்தைக்கு வலு சேர்க்கும் எனலாம்.

புதன்

இன்று எப்படி இருக்கும் 18/09/2008

அமெரிக்க சந்தை சுமார் 4 விழுக்காட்டிற்கு மேல் இழந்திருப்பதை பார்க்கும் பொழுது நமது சந்தையும் 4 விழுக்காட்டை இழக்கும் என்று எதிர்பார்கிறேன். Nifty Futures தனது சமீபத்திய குறைவான 3515.00 என்ற நிலையை உடைக்கும் வாய்ப்புகள் தென்படுகின்றன, over sold என்ற நிலையில் இருப்பதால் சிறிது உயரவும் வாய்ப்பு உண்டு, எனினும் இன்றைய சந்தை குறைந்தது 40-80 புள்ளிகளை இழக்கும் என்றே எதிர்பார்கிறேன். தினமும் சொல்வது போல் அன்றைய லாப நஷ்டங்களை அன்றே தீர்மானிப்பது முதலீடை தக்கவைக்க உதவும். எனவே இன்றைய சந்தை 3920 முதல் 3980 என்ற நிலையில் ஓடிக்கொண்டிருக்கும் .

தங்க விதி - 2


* எப்பொழுதும் லாபத்தை நஷ்டமாக விடாதீர்கள் *
* Never let a profit turn into a loss *

நீங்கள் வாங்கியிருக்கும் பங்குகள் லாபத்தை கொடுத்தால் அதை பெற்றுக்கொண்டு உங்கள் வசமாக்குங்கள். ஒரு பங்கின் விலை ஏறிக்கொண்டே இருக்கும் என்ற எண்ணத்தை விட்டொழியுங்கள் ,ஏன்னென்றால் விலைகள் எப்பொழுதும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டேதான் இருக்கும். பொதுவாக நீங்கள் எங்கு முதலீடு செய்திருந்தாலும் அப்பணம் சிறுக சிறுக தான் வளரும், பங்கு சந்தையில் மட்டும் இன்று முதலீடு செய்தல் நாளை இரட்டிப்பு ஆகும் என்றே பலர் எண்ணுவதால் ஏமாற்றம் அடைகின்றனர்.
முதலீடு செய்துள்ள பணத்திற்கு உண்டான மதிப்பு கண்டிப்பாக கிடைக்கும். சிறு துளி பெரு வெள்ளம் என்பதை போல சிறு சிறு லாபங்களை ஈட்டி கொண்டே சென்றால் கண்டிப்பாக பின்னாளில் அது மிக பெரிய செல்வமாக மாறும். ஆகவே எபொழுதும் லாபத்தை நஷ்டமாக விடாதீர்கள்.

இன்றைய வணிகம் 17/09/2008

இன்றைய வணிகத்தில் தேசிய பங்குச் சந்தை 66.65 புள்ளிகளை இழந்து 4008.25 என்ற அளவில் நிறைவடைந்து உள்ளது. சில வதந்திகள் நிலவியதால் பங்குச் சந்தையில் கிலியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும் ( முன்னணி தனியார் வங்கி இன்னும் சற்று தினங்களில் திவால் அறிவிப்பை வெளியிடும் என்ற செய்தி பரவியதால் அப்பங்கின் விலை குறைந்து பின்னர் மேலே சென்றது ). கடந்த வாரத்தில் ஆரம்பித்த சரிவு இன்னும் நிற்கவில்லை என்பதை பார்க்கும் பொழுது, பழைய நிலையான 3650 யை உடைக்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை.
கடந்த வாரத்தில் பணவீக்கம் தணிந்திருப்பது , கச்சா எண்ணை விலை இறங்கி இருப்பது, தங்கம் விலை இறங்கி உள்ளது போன்ற காரணங்கள் நமது சந்தை மேலே செல்வதற்கு துணையாக இருந்தாலும், உலக சந்தையை ஒட்டியே பயணித்து சரிவைக் கண்டது. எனினும் நேற்றைய அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகளின் எழுச்சியை இன்றைய சந்தை பிரதிபலிக்கவில்லை. இன்றைய சந்தையில் nifty futures கடைசி கட்ட பயணத்தை பார்க்கும் பொழுது இன்னும் கரடியின் ஆதிக்கம் தொடரும். தின வணிகத்தில் பொறுமையை கடைபிடித்தால் கொஞ்சம் இலாபம் ஈட்டலாம், வரும் நாட்களில் வங்கி பங்குகளில் வணிகம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அப்பங்குகள் நிறைய ஏற்ற இறக்கங்களை காண்பிக்கும் என்றே தோன்றுகிறது.
nifty futures ல் வணிகம் செய்பவர்கள் சற்றே நிதானத்துடன் செயல்பட்டால் பணத்தை அள்ளலாம், காற்றுள்ள திசையில் பயணிக்கும் பொழுது சற்று கவனம் தேவை. அதற்கு option வணிகத்திலும் ஈடுபடுவது சாலச் சிறந்தது. நாம் வணிகத்தில் செய்யும் மிக பெரிய கவனக் குறைவு, நஷ்டத்தை எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டி பொறுத்து செல்வதை போல் அல்லாமல் லாபத்தை உடனே பெற்றுக் கொள்கிறோம் . அவ்வாறு செய்யாமல் லாபத்தையும் நீட்டி செல்ல பொறுமையை கடை பிடித்தால் கண்டிப்பாக வெற்றி அடையலாம்.

பங்கு வணிகத்தில் ஈடு படுவதற்கு சில முக்கிய வரை முறைகளை கண்டிப்பாக கடைபிடித்தால் மிக பெரிய இலாபத்தை ஈட்டலாம். எந்த துறையிலும் வெற்றி பெற சிறிது உழைப்பும் தேவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதை வரும் வாரங்களில் கவனிப்போம்.

செவ்வாய்

16-09-2008

அமெரிக்க சந்தையின் வீழ்ச்சி இன்று நமது சந்தையினை தாக்கும் என்பதில் எவ்வித ஐயப்படும் இல்லை. dow jones -503.99 மற்றும் nasdaq 81.36, புள்ளிகளை இழந்து உள்ளதை கவனிக்கையில் தேசிய பங்கு சந்தை இன்றும் குறைந்தது 100 புள்ளிகளை இழக்க வாய்ப்பு உள்ளது.
இன்றைய சந்தையில் விற்பவர்கள் அதிகரிக்கலாம் என்றே எண்ணுகிறேன். இன்னும் அமெரிக்க சந்தையில் வங்கிகளின் மர்மங்கள் வெளிவர இருப்பதால் உலக அளவில் பங்குச் சந்தை மேலும் பின்னடையும் வாய்ப்புகள் தென்படுகிறது. எனவே அன்றைய லாப நஷ்டங்களை அன்றே தீர்மானிப்பது புத்திசாலிதனமான முடிவாகும். இன்றைய நிலையில் Nifty 4000 என்ற அளவில் முடிவடைந்தால் சந்தை இன்னும் சிறிது காலம் தாக்குபிடிக்கலாம், இல்லையெனில் பழைய நிலைகளை உடைப்பதை பார்க்கலாம்.

திங்கள்

தங்க விதி 1


உங்கள் முதலீட்டை பத்து பாகங்களாக பிரித்து கொள்ளவும் .
(Divide your trading capital into ten equal risk segments)

நீங்கள் முதலீடு செய்யும் மொத்த பணத்தை பத்து பாகமாக பிரித்து கொள்ளவும் , அவற்றை ஒரே துறையில் முதலீடு செய்யாமல் மிக அதிக அளவில் ஏற்றம் பெறக்கூடிய முக்கிய துறைகளில் முதலீடு செய்யலாம். அவ்வாறு தேர்தெடுக்கும் பங்குகளில் அதிக அளவில் வாணிபம் நடைபெறக்கூடிய முதல் இரண்டு பங்குகளில் மட்டும் முதலீடு செய்யலாம்.
நீங்கள் தேர்தெடுக்கும் துறைகளின் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள், அதன் எதிர்கால வளர்ச்சி, அரசாங்கம் ஏற்படுத்தும் புதிய கொள்கைகள், சந்தையில் அதன் தாக்கம், சென்ற வருடத்தின் லாபம், அந்த கம்பெனியின் எதிர்கால விரிவாக்க திட்டங்கள் ஆகியவற்றை மிக முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதலீடு செய்யும் பொழுது ஏதாவது துறை சுணக்கம் கண்டாலும் மற்ற பங்குகளில் முதலீட்டை திரும்ப பெற்றுவிடலாம்.

16-09-2008

எதிர்பார்த்ததை போலவே இன்றும் நமது சந்தை மிக பெரிய சரிவை சந்தித்துள்ளது . இதற்கு மிக முக்கியமான காரணங்களாக சொல்லப்படுவது லேஹ்மான் பிரதர்ஸ் என்ற அமெரிக்காவின் மிக முக்கியமான கம்பெனி தன் சரிவை ஈடு கட்ட இந்தியாவில் தான் முதலீடு செய்துள்ளதை பெருமளவில் விற்று வருகிறது என்பது தான் .

ஆகஸ்ட் 21 ம் தேதி முதல் தன் வசம் வைத்து இருந்த NIIT Ltd, Cranes Software, Amtek Auto, Amtek India, Fedders Llyod, Northgate, Mastek, Triveni Engg and Prajay Engg போன்ற பங்குகளை விற்று கொண்டே வருகிறது , இதற்கு முன் சுமார் 1000 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த அதன் முதலீடு, இன்று 500 கோடி ரூபாய் முதலீட்டை திரும்ப எடுத்துக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு விற்ற பங்குகளில் Deutsche பேங்க் என்ற இன்னொரு வங்கி முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது.

இன்றைய சந்தையின் குறியீடுகளை பார்க்கும் பொழுது சந்தை மேலும் தன் பலத்தை இழக்கும் என்றே எண்ணுகிறேன் . nifty 4000 என்ற நிலையை உடைத்துள்ளதை பலவீனமாக கருதுகிறேன். வரும் வாரங்களில் 3750 என்பது மேலும் ஒரு தடைக் கல்லாக அமையும் , அதையும் உடைக்கும் பொழுது 3500 என்பது மிக எளிதாக உடைபடும்.

நீண்ட கால முதலீட்டாளர்கள் இன்னும் சற்று பொறுமையாக இருக்க வேண்டிய கால கட்டமாக தெரிகிறது. தங்க விதிகளில் சொன்னபடி சிறிது காலம் பங்குச் சந்தையிலிருந்து ஓய்வு எடுத்துவிட்டு வரலாம். தற்போதைய காலத்தில் விவசாயம் சார்ந்த துறையின் பங்குகளில் முதலீடு செய்வது ஏற்றதாகும். சந்தை இன்னும் கரடியின் பிடியில் என்பதை மறுப்பதற்கில்லை. எது எப்படியாகினும் தின வர்த்தகத்தில் ஈடு படுவோர் சற்று கவனமாக செயல்பட்டால் வெற்றியை ஈட்டலாம். இன்றைய நிலையில் ஆப்சன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் நல்ல பலனைக் காணலாம் .

இந்த மாத வணிகத்தில் இன்று மிக பெரிய அளவில் சுமார் 61185 .99 கோடி ரூபாய் என்ற அளவில் F&O வர்த்தகம் நடந்துள்ளது. கச்சா எண்ணையின் தற்போதைய நிலை பற்றி மேலும் அறிந்து கொள்ள http://money.cnn.com/2008/09/15/markets/oil/index.htm

15-09-2008

கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் ஆசியா சந்தைகள் அனைத்தும் கீழே இறங்கிஇருப்பது வரும் வாரங்களிலும் தொடரும் என்றே நம்ப தோன்றுகிறது . கடந்த நான்கு மாதங்களில் அமெரிக்காவின் அனைத்து முன்னணி வங்கிகளும் தங்களுடைய மதிப்பை இழந்து பின்னடவை சந்தித்துள்ளது, அமெரிக்கா சந்தைகளின் முன்னேற்றத்தை தடுத்துள்ளது.

சென்ற சனிக்கிழமை நமது தலைநகரத்தில் வெடித்த குண்டுகளும் இன்று நம் சந்தையினை பாதிக்கலாம் என்றே எண்ணுகிறேன், இன்று சந்தை சுமார் 50 புள்ளிகள் கீழிறங்கி அதை தக்க வைத்து கொள்ள சிரமப்படும் , இவை அள்ளாமல் உலக சந்தையினை ஒட்டியே நகரும் நம் சந்தையினை போக்கை பார்க்கும் பொழுது மேலும் 4000 என்ற அளவை தொடலாம் என்றே எண்ணுகிறேன்.Nifty

Nifty Futures 4216-4185-4166 என்ற நிலைகளில் தொடரலாம் .

வெள்ளி

12-09-2008

இன்று சந்தை ஏற்றத்துடன் ஆரம்பித்தாலும் அதை தக்க வைத்து கொள்ள தடுமாறி 61.85 புள்ளிகளை இழந்து 4228.45 என்ற அளவில் முடிவடைந்துள்ளது . பெரும்பாலான ஆசியா மற்றும் அமெரிக்கா சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தாலும் நமது சந்தை சற்று தன் சுரத்தை இழந்து உள்ளது, பணவீக்கம், கச்சா எண்ணெய் விலை போன்றவை சாதகமா இருந்தாலும் நமது சந்தையில் சமீபகாலமாக விற்பவர்கள் அதிகமா இருப்பதால் இறங்கியுள்ளது என்றே நினைக்கிறேன் . கடந்த வாரத்தில் Nifty Futures 4564.10 என்ற அளவை தொட்டு இன்று இறுதியாக 4216.00 என்ற அளவில் முடிவடைந்து இருக்கிறது, இது சுமார் 348 புள்ளிகளை இழந்திருக்கிறது. மேலும் அடுத்து வரும் நாட்களில் கரடியின் ஆதிக்கம் தொடரும் என்று எண்ணுகிறேன் . வரும் வாரத்தில் nifty Futures 3850 வரும் என்றே எதிர்பார்கிறேன்.

அமெரிக்கா மற்றும் ஆசியா சந்தைகள் கீழே இறங்கி இருப்பது மேலும் நமது சந்தையை பலவீனமாக்கும் என்றே எண்ணுகிறேன் . தற்போதை சூழ்நிலையில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் கீழே இறங்கி இருப்பது சற்றே ஆறுதலை தந்தாலும் ரூபாய் மதிப்பு கீழே செல்வதால் பொருளாதரம் மேலும் பலவீனம் அடைந்திருப்பதை மறுக்க முடியாது . மேலோட்டமாக பார்க்கும்பொழுது உலக அளவில் பொருளாதாரம் சற்றே பலவீனம் அடைந்திருப்பதும் ,அதன் தாக்கம் நமது சந்தையினை பின்னோக்கி இழுத்து இருப்பதும் வெட்ட வெளிச்சமாகிறது .

இவ்வாறு இருக்கும் பொருளாதார சிக்கல்களை வரும் காலங்களில் மேலும் பெரிதாக்குவதற்கு நிறைய காரணங்கள் உள்ளது . அமெரிக்காவில் நடக்கவிருக்கும் தேர்தல் , அங்கு பெருகிவரும் வேலைஇல்லா திண்டாட்டம் , மற்றுமல்லாமல் இங்கே நாமும் தேர்தலை எதிர்நோக்கி உள்ளோம். இவைகளில் மிக முக்கியமான சில ஏமாற்றங்களை தந்தால், மேலும் பொருளாதாரம் பலவீனமடைய வாய்ப்பு உள்ளது.