எதிர்பார்த்ததை போலவே இன்றும் நமது சந்தை மிக பெரிய சரிவை சந்தித்துள்ளது . இதற்கு மிக முக்கியமான காரணங்களாக சொல்லப்படுவது லேஹ்மான் பிரதர்ஸ் என்ற அமெரிக்காவின் மிக முக்கியமான கம்பெனி தன் சரிவை ஈடு கட்ட இந்தியாவில் தான் முதலீடு செய்துள்ளதை பெருமளவில் விற்று வருகிறது என்பது தான் .
ஆகஸ்ட் 21 ம் தேதி முதல் தன் வசம் வைத்து இருந்த NIIT Ltd, Cranes Software, Amtek Auto, Amtek India, Fedders Llyod, Northgate, Mastek, Triveni Engg and Prajay Engg போன்ற பங்குகளை விற்று கொண்டே வருகிறது , இதற்கு முன் சுமார் 1000 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த அதன் முதலீடு, இன்று 500 கோடி ரூபாய் முதலீட்டை திரும்ப எடுத்துக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு விற்ற பங்குகளில் Deutsche பேங்க் என்ற இன்னொரு வங்கி முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது.
இன்றைய சந்தையின் குறியீடுகளை பார்க்கும் பொழுது சந்தை மேலும் தன் பலத்தை இழக்கும் என்றே எண்ணுகிறேன் . nifty 4000 என்ற நிலையை உடைத்துள்ளதை பலவீனமாக கருதுகிறேன். வரும் வாரங்களில் 3750 என்பது மேலும் ஒரு தடைக் கல்லாக அமையும் , அதையும் உடைக்கும் பொழுது 3500 என்பது மிக எளிதாக உடைபடும்.
நீண்ட கால முதலீட்டாளர்கள் இன்னும் சற்று பொறுமையாக இருக்க வேண்டிய கால கட்டமாக தெரிகிறது. தங்க விதிகளில் சொன்னபடி சிறிது காலம் பங்குச் சந்தையிலிருந்து ஓய்வு எடுத்துவிட்டு வரலாம். தற்போதைய காலத்தில் விவசாயம் சார்ந்த துறையின் பங்குகளில் முதலீடு செய்வது ஏற்றதாகும். சந்தை இன்னும் கரடியின் பிடியில் என்பதை மறுப்பதற்கில்லை. எது எப்படியாகினும் தின வர்த்தகத்தில் ஈடு படுவோர் சற்று கவனமாக செயல்பட்டால் வெற்றியை ஈட்டலாம். இன்றைய நிலையில் ஆப்சன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் நல்ல பலனைக் காணலாம் .
இந்த மாத வணிகத்தில் இன்று மிக பெரிய அளவில் சுமார் 61185 .99 கோடி ரூபாய் என்ற அளவில் F&O வர்த்தகம் நடந்துள்ளது. கச்சா எண்ணையின் தற்போதைய நிலை பற்றி மேலும் அறிந்து கொள்ள http://money.cnn.com/2008/09/15/markets/oil/index.htm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக