புதன்

இன்றைய வணிகம் 17/09/2008

இன்றைய வணிகத்தில் தேசிய பங்குச் சந்தை 66.65 புள்ளிகளை இழந்து 4008.25 என்ற அளவில் நிறைவடைந்து உள்ளது. சில வதந்திகள் நிலவியதால் பங்குச் சந்தையில் கிலியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும் ( முன்னணி தனியார் வங்கி இன்னும் சற்று தினங்களில் திவால் அறிவிப்பை வெளியிடும் என்ற செய்தி பரவியதால் அப்பங்கின் விலை குறைந்து பின்னர் மேலே சென்றது ). கடந்த வாரத்தில் ஆரம்பித்த சரிவு இன்னும் நிற்கவில்லை என்பதை பார்க்கும் பொழுது, பழைய நிலையான 3650 யை உடைக்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை.
கடந்த வாரத்தில் பணவீக்கம் தணிந்திருப்பது , கச்சா எண்ணை விலை இறங்கி இருப்பது, தங்கம் விலை இறங்கி உள்ளது போன்ற காரணங்கள் நமது சந்தை மேலே செல்வதற்கு துணையாக இருந்தாலும், உலக சந்தையை ஒட்டியே பயணித்து சரிவைக் கண்டது. எனினும் நேற்றைய அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகளின் எழுச்சியை இன்றைய சந்தை பிரதிபலிக்கவில்லை. இன்றைய சந்தையில் nifty futures கடைசி கட்ட பயணத்தை பார்க்கும் பொழுது இன்னும் கரடியின் ஆதிக்கம் தொடரும். தின வணிகத்தில் பொறுமையை கடைபிடித்தால் கொஞ்சம் இலாபம் ஈட்டலாம், வரும் நாட்களில் வங்கி பங்குகளில் வணிகம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அப்பங்குகள் நிறைய ஏற்ற இறக்கங்களை காண்பிக்கும் என்றே தோன்றுகிறது.
nifty futures ல் வணிகம் செய்பவர்கள் சற்றே நிதானத்துடன் செயல்பட்டால் பணத்தை அள்ளலாம், காற்றுள்ள திசையில் பயணிக்கும் பொழுது சற்று கவனம் தேவை. அதற்கு option வணிகத்திலும் ஈடுபடுவது சாலச் சிறந்தது. நாம் வணிகத்தில் செய்யும் மிக பெரிய கவனக் குறைவு, நஷ்டத்தை எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டி பொறுத்து செல்வதை போல் அல்லாமல் லாபத்தை உடனே பெற்றுக் கொள்கிறோம் . அவ்வாறு செய்யாமல் லாபத்தையும் நீட்டி செல்ல பொறுமையை கடை பிடித்தால் கண்டிப்பாக வெற்றி அடையலாம்.

பங்கு வணிகத்தில் ஈடு படுவதற்கு சில முக்கிய வரை முறைகளை கண்டிப்பாக கடைபிடித்தால் மிக பெரிய இலாபத்தை ஈட்டலாம். எந்த துறையிலும் வெற்றி பெற சிறிது உழைப்பும் தேவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதை வரும் வாரங்களில் கவனிப்போம்.

கருத்துகள் இல்லை: