வெள்ளி

12-09-2008

இன்று சந்தை ஏற்றத்துடன் ஆரம்பித்தாலும் அதை தக்க வைத்து கொள்ள தடுமாறி 61.85 புள்ளிகளை இழந்து 4228.45 என்ற அளவில் முடிவடைந்துள்ளது . பெரும்பாலான ஆசியா மற்றும் அமெரிக்கா சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தாலும் நமது சந்தை சற்று தன் சுரத்தை இழந்து உள்ளது, பணவீக்கம், கச்சா எண்ணெய் விலை போன்றவை சாதகமா இருந்தாலும் நமது சந்தையில் சமீபகாலமாக விற்பவர்கள் அதிகமா இருப்பதால் இறங்கியுள்ளது என்றே நினைக்கிறேன் . கடந்த வாரத்தில் Nifty Futures 4564.10 என்ற அளவை தொட்டு இன்று இறுதியாக 4216.00 என்ற அளவில் முடிவடைந்து இருக்கிறது, இது சுமார் 348 புள்ளிகளை இழந்திருக்கிறது. மேலும் அடுத்து வரும் நாட்களில் கரடியின் ஆதிக்கம் தொடரும் என்று எண்ணுகிறேன் . வரும் வாரத்தில் nifty Futures 3850 வரும் என்றே எதிர்பார்கிறேன்.

அமெரிக்கா மற்றும் ஆசியா சந்தைகள் கீழே இறங்கி இருப்பது மேலும் நமது சந்தையை பலவீனமாக்கும் என்றே எண்ணுகிறேன் . தற்போதை சூழ்நிலையில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் கீழே இறங்கி இருப்பது சற்றே ஆறுதலை தந்தாலும் ரூபாய் மதிப்பு கீழே செல்வதால் பொருளாதரம் மேலும் பலவீனம் அடைந்திருப்பதை மறுக்க முடியாது . மேலோட்டமாக பார்க்கும்பொழுது உலக அளவில் பொருளாதாரம் சற்றே பலவீனம் அடைந்திருப்பதும் ,அதன் தாக்கம் நமது சந்தையினை பின்னோக்கி இழுத்து இருப்பதும் வெட்ட வெளிச்சமாகிறது .

இவ்வாறு இருக்கும் பொருளாதார சிக்கல்களை வரும் காலங்களில் மேலும் பெரிதாக்குவதற்கு நிறைய காரணங்கள் உள்ளது . அமெரிக்காவில் நடக்கவிருக்கும் தேர்தல் , அங்கு பெருகிவரும் வேலைஇல்லா திண்டாட்டம் , மற்றுமல்லாமல் இங்கே நாமும் தேர்தலை எதிர்நோக்கி உள்ளோம். இவைகளில் மிக முக்கியமான சில ஏமாற்றங்களை தந்தால், மேலும் பொருளாதாரம் பலவீனமடைய வாய்ப்பு உள்ளது.

கருத்துகள் இல்லை: