வியாழன்
இன்றைய வணிகம் 18-9-2008
எதிர்பார்த்ததை போலவே இன்றும் நமது சந்தை சுமார் 5 விழுக்காட்டை இழந்து , பின்னர் அனைத்து முன்னணி பங்குகளின் நிலையால் முன்னேறியது. நேற்றே சொன்னது போல் 4000 என்ற நிலைகளை கடந்து இரண்டாவது நாளாக நமது சந்தை நிறைவடைந்திருப்பது சற்று ஆறுதலை தருகிறது. அமெரிக்காவின் மத்திய வங்கிகள் அனைத்தும் ஒன்றினைந்து சுமார் 360 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி நெருக்கடியை சமாளிக்க கை கோர்த்துள்ளன. இவ்வறிப்பு அமெரிக்க சந்தையில் புதிய இரத்தத்தை பாய்ச்சும் என்றே கருதுகிறேன்.
கடந்த 52 வாரங்களில் இன்று Nifty Futures அதிக அளவில் இன்று வணிகம் நடந்துள்ளது. இது நமது சந்தையினை வலுவாக்குமா அல்லது வலுவிழக்க செய்யுமா என்று வரும் நாட்களில் தெரிய வரும். மேலும் இன்று இந்த வார பணவீக்க விகிதம் , சற்றே கீழே இறங்கினால் நமது சந்தைக்கு வலு சேர்க்கும் எனலாம்.
1 கருத்து:
நல்ல முயற்சி. மேலும் பங்கு சந்தை charts மற்றும் அவற்றின் விளக்கங்களுடன் இடுகைகள் இருந்தால் மேலும் நன்றாய் இருக்கும்.
கருத்துரையிடுக